200வது செயற்பாட்டுக்காக இலங்கை வந்துள்ள பொதுநலவாய கண்காணிப்புக்குழு
பொதுநலவாய கண்காணிப்பாளர் குழு ( (COG), இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்காக கொழும்பிற்கு வந்துள்ளது.
இது, பொதுநலவாய அமைப்பின 200வது தேர்தல் கண்காணிப்பைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேர்தல் ஆணையகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, முழு செயல்முறையையும் கண்காணிப்பதற்காகவே பொதுநலவாய பொதுச்செயலாளரால் அமைக்கப்பட்ட 15 பேரைக்கொண்ட கண்காணிப்புக் குழு இலங்கை வந்துள்ளது.
தமது இடைக்கால அறிக்கை
சீசெல்ஸின் முன்னாள் ஜனாதிபதி HE Danny Faure, இந்தக்குழுவுக்கு தலைமை ஏற்றுள்ளார்.
இந்தநிலையில், பொதுநலவாய அமைப்பின் 200 ஆவது தேர்தல் கண்காணிப்பு மைல்கல்லைக் குறிக்க இலங்கைக்கு வந்திருப்பதில் பெருமையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் கண்காணிப்புக்குழு, ஏற்கனவே பல தரப்பினரையும் சந்திக்க ஆரம்பித்துள்ளது.
குறித்த கண்காணிப்புக்குழுவினர், தேர்தல் நாளில் வாக்களிப்பு, நிறைவு, எண்ணுதல் செயல்முறைகளைக் கண்காணிப்பார்கள் அத்துடன் செப்டம்பர் 23 அன்று, தமது இடைக்கால அறிக்கையை அவர்கள் வெளியிடுவார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |