தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர்
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கோவிட் தொற்று உறுதியான பின்னர் கண்டியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால், சுகாதார பிரிவினரால் தெல்தெனிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர், தெல்தெனிய வைத்தியசாலையில் இருந்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமன் ஸ்ரீ ரத்நாயக்கவுக்கு கோவிட் தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
