மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியால் அதிரடி கைது
புதிய இணைப்பு
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வாடகைக் காரின் சேசிஸ் எண்ணை மாற்றி, அதன் போலிப் பதிவுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கமல் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.
முதலாம் இணைப்பு
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வாகனப் பதிவு முறைகேடு தொடர்பான விசாரணைக்காக இன்று (27) குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam