ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மார்ச் 10ம் திகதியன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற வணிகக் குழுவின் கூட்டத்தின் போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஒத்திவைப்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ஆணைக்குழு அறிக்கை தொடர்பான விவாதம் முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் ஜனாதிபதி ஆணையத்தின் விசாரணைகள் 2021 ஜனவரி 27 அன்று அதிகாரப்பூர்வமாக ஒரு முடிவுக்கு வந்தன, இதன்பின்னர் அதன் இறுதி அறிக்கை பெப்ரவரி முதலாம் திகதியன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆணைக்குழு அதன் காலப்பகுதியில் மொத்தம் 440 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்திருந்தது.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
