உயர்நீதிமன்ற நீதியரசர் றோகினி மாரசிங்க தலைமையிலான ஆணைக்குழு யாழ். விஜயம் (photos)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் றோகினி மாரசிங்க தலைமையிலான ஆணைக்குழுவின் உயர்மட்ட குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் (16.02.2023) உயர்மட்ட குழுவில் விசாரணைப் பணிப்பாளர், சட்டவல்லுநர் ஆகியோரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்திலுள்ள சமய தலைவர்களுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழு தொடர்பான பிரச்சினைகள்
போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு மற்றும் புனர்வாழ் அளித்தல் சமய நிறுவனங்கள் புனர்வாழ்வளித்தலுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பாகவும், இது குறித்து மனித உரிமை ஆணைக்குழு எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கமைய வடமாகணத்தில் உள்ள மூன்று பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுடனும் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் தொடர்பிலான கலந்துரையாடல்
தற்போது வடமாகாணத்தில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாகவும், இதேபோல பெலிஸாருக்கு கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இன்று (17.02.2023) உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்படுவது குறித்து அரசியல் பிரமுகர்களுடனும் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்படவுடுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
