வெடுக்குநாறி மலை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து (Photos)
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாகப் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமாக இந்துக்களினால் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி லிங்கேஸ்வர ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூஜை வழிபாடுகளைத் தொடர்வதற்கு, அரசாங்க திணைக்களங்கள் சிலவற்றின் கடமை சார் செயற்பாடுகள் இடையூறாக அமைந்துள்ள நிலையில், குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் (15.02.2023) கண்காணிப்பு பயணம் ஒன்றினை மேற்கொண்ட போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பாகப் பிரதேச மக்களின் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் கேட்டறிந்த அமைச்சர், மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் அரசாங்க திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையுமாயின், அவைதொடர்பாக கரிசனை செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள்
சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதுடன், துறைசார் அமைச்சர்களுடனும் பிரஸ்தாபித்து சுமுகமான தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக, தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும்
அபிலாசைகளைத் தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

தொல்லியல் சின்னங்கள்
இதன்போது, சம்மந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்வதுடன், சம்மந்தப்பட்ட துறைசார் அமைச்சர்களுடன் இணைந்து சுமுகமான தீர்வை காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
அத்துடன், குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையில் அனைவரின் செயற்பாடுகள் அமைவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெடுக்கநாறி மலைக்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பயணத்தின் போது, ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனும்
ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam