வவுனியாவில் நோயாளர் வீட்டுத்தரிசிப்பு செயற்றிட்ட நடவடிக்கை ஆரம்பம் : விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Sri Lanka People Vavuniya Patient Hospital Visit
By Independent Writer Jan 11, 2022 09:05 AM GMT
Report

 வவுனியா வைத்தியசாலை ஊடாக நோயாளர் வீட்டுத் தரிசிப்பு செயற்றிட்ட நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.ராகுலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

வடமாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக மாகாண சுகாதார திணைக்களத்தினால் மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்பட்டுள்ள நோயாளர் வீட்டுத்தரிசிப்பு செயற்றிட்டம் ஊடாக நீண்டகாலம் கடும் தொற்றுக்குள்ளாகி இயங்குவதற்கு இயலாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதில் கடினங்களை எதிர் நோக்குகின்ற நோயாளர்களுக்கான தேவைகளை மாவட்ட வைத்தியசாலையிலுள்ள மருத்துவக்குழாம் அவர்களுடைய வீட்டிற்கு சென்று அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு செயற்றிட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

முக்கியமாக இரண்டு விடயங்கள் ஒன்று மாற்றுத்திறனாளிகள் , அல்லது விஷேட தேவையுடைய சிறுவர்களோ, நோயாளர்களோ கடுமையான தொற்றுக்குள்ளாகி அதனூடாக வைத்தியசாலைக்கு வருவதற்கு முடியாதவர்கள் பாரிசவாதம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையிலுள்ள நோயாளர்கள் போன்றவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது இச் செயற்றிட்டம் அவசர நோயாளர்களுக்கான தேவையை பூர்த்தி செய்கின்ற செயற்றிட்டம் அல்ல.

மக்களுடைய பொருளாதார பிரச்சினை, பயணச்சிக்கல்கள் பெரும்பாலான விடயங்களை கருத்திற்கொண்டு இச் சிகிச்சை முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நோயாளர்களுக்கான சிறுநீரக டியூப் மாற்றுதல், அவர்களுக்கு உணவு செல்கின்ற டியூப் மாற்றுதல், படுக்கையிலுள்ள நோயாளர்களுக்கு ஏற்படுகின்ற புண்கள் அல்லது மருந்து கட்டுதல் போன்ற செயற்றிட்டங்களை வீட்டிற்கு சென்று முன்னெடுக்கப்படவுள்ளது .

இந்நடவடிக்கைக்கு விஷேட தொலைபேசி இலக்கமான 0772772677 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டால் ஒரு மணி நேரத்தில் அல்லது பிற்பகலில் தொடர்பு கொண்டால் மாலையில் இச் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

இச் சேவையை பெற்றுக்கொள்ளுபவர்களுக்கு எவ்வளவு கால நேரத்திற்குள் இச்சேவையை வழங்க முடியும் போன்ற விபரங்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக வவுனியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இச் சேவையை வழங்குவதுடன் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரையும் இச் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதனால் ஏற்படும் அனுபவங்களை கொண்டு நேரம் மற்றும் பிரதேசங்கள் வேறுபட்டு கொண்டிருக்கும். இச் சேவையை வெற்றிகரமானதாக கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் மேலும் தெரிவித்துள்ளார் .      

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US