மன்னாரை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி (Photos)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி மன்னாரை வந்தடைந்தது.
கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமான நிலையில் வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் குறித்த நினைவேந்தல் ஊர்தி சென்று முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் 5 ஆவது நாளான இன்று குறித்த ஊர்தி மன்னாரை வந்தடைந்தது.
இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழின படுகொலைக்கு நீதி கோரி இடம்பெற்ற ஊர்திப்பவனியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி நிதிகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
