தமிழர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)
வவுனியா சேமமடு கிராமத்தில் 39 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 29 பேருக்கான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நேற்று (02.11.2022) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது புலம்பெயர்ந்து வாழும் கிராமத்தவர்கள் நிதி பங்களிப்பில், சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1000 மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளதோடு ஆதிவிநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை கிராமத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் ஒதியமலை கிராமத்தில் நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நேற்று (02.11.2022) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
உணவுபூர்வமாக இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கனகையா தவராசா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஜோன்சன் ஆகியோருடன் படுகொலை செய்யப்பட்டவர்களுடைய உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: வருணன், கீதன்





திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
