படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் (Mayilvaganam Nimalarajan) 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - கச்சேரியடிப் பகுதியில், உள்ள தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், 2000ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் திகதி இரவு ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் யாழ். ஊடக அமையத்தில் இன்று பகல் 11.30 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்திற்கு யாழ். மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனும் (V. Manivannan) வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோசும் (Nirosh) இணைந்து மலர் மாலை அணிவித்துள்ளனர்.
அதனையடுத்து யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் ஜெயசீலன் (Jayaseelan) நினைவுச்சுடரை ஏற்றியதுடன் ஊடகவியலாளர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.





3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam