படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12ஆவது நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவு தின நிகழ்வில் தீபச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் மற்றும் மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதிகோரி அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் லசந்த உட்பட படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam