எதிர்வரும் ஆண்டில் இருந்து தனியார் துறையினர் ஊழியர் நாளேடு பயன்படுத்த வேண்டும்: சாமிநாதன் சிவகுமார்
வட மாகாணத்தில் எதிர்வரும் ஆண்டில் இருந்து தனியார் துறையினர் ஊழியர் நாளேடு பயன்படுத்த வேண்டும் எனவும் இல்லாமல் போனால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாணத்தின் தனியார் ஊழியர் சங்க தலைவர் சாமிநாதன் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (30.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் நிறுவனத்தில் கடமை புரியும் 80 வீதமான ஊழியர்கள் தாம் கடமை புரியும் நிறுவனத்தில் தமது வரவினை மேற்கொள்வதில்லை.
ஊழியர்கள் தொடர்பிலான விபரங்கள்
அடுத்த ஆண்டில் இருந்து அவர்களுக்கான நாளேடு காட்சிப்படுத்தப்படுவதுடன் EPF, ETF இலக்கணமும் நாளேட்டில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாத தனியார் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெரிய தனியார் நிறுவனங்களில் இந்த நடைமுறை உள்ளது. ஆனால் சிறிய தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், புடவை கடைகள் ஆகியவற்றில் இது பேணப்படுவதில்லை. எனவே ஊழியர்கள் வேலைக்கு வந்து செல்லும் விபரங்கள் நாளேட்டில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.



