கொழும்பின் புறநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நபர் - விசாரணையில் வெளியான தகவல்
கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெரஹெர, போதிராஜபுர பிரதேசத்தில் நேற்றிரவு முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மற்றுமொருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுதேஷ் பெர்னாண்டோ என்பவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதி
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி சாரதி கத்தியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் தனது இல்லத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள போதிராஜபுர வீதியில் தொலைபேசி அழைப்பை எடுத்துக்கொண்டிருந்த போது சந்தேகநபரான சாரதி அவ்விடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றி கத்தியால் குத்தியதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. . கத்தியால் குத்திய பின்னரும், சந்தேகநபர் மீண்டும் அந்த நபரை துரத்திச் சென்றது. அருகில் உள்ள வீட்டின் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மனைவியுடன் தொடர்பு
காயமடைந்த நபரை உறவினர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சந்தேக நபரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.