கொழும்பில் இளம் பெண் ஒருவர் செய்யும் பாரிய மோசடி அம்பலம்
கொழும்பில் பிரபல வர்த்தக நிலையங்களுக்கு வரும் ஆண்களின் ATM அட்டைகளை திருடும் பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அவிசாவளையிலுள்ள பிரபல நிறுவனத்திற்கு வந்த பெண்ணொருவர் தனது வங்கி அட்டையைத் திருடிவிட்டதாக வெளியிட்ட தகவலுக்கு அமைய இந்த மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.
ATM அட்டைகள் திருட்டு
குறித்த பெண் வங்கி அட்டையைத் திருடிய பின்னர் அதனைக் கொண்டு ஹோமாகம மற்றும் மஹரகமவில் அமைந்துள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபா செலவு செய்துள்ளார்.
4 கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப் பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், தொடர்பு கொள்ளுமாறு பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மக்கள் அவதானம்
மக்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடங்களுக்கு வரும் பெண் மிகவும் நுட்பமான முறையில் ATM அட்டைகளை திருடி சென்று பொருட்கள் கொள்வனவு செய்வதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
