கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் தெரிவான தமிழ் பாடசாலைகள்
தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்திய முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியினால் முன்வைக்கப்பட்ட 5 ஆய்வு முன்மொழிவுகளும் இலங்கையின் தலைசிறந்த விஞ்ஞானிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராட்டினைப் பெற்றுள்ளது.
தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சினால் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வு மலரில் பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியின் நாமம் பதிவாகியுள்ளமையும் பெருமைக்குரியதாகும்.
இம்மாநாட்டில் பங்குபற்றிய தமிழ்மொழி மூலமான இரு பாடசாலைகளில் கிழக்கிலிருந்து பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியும் வடக்கிலிருந்து இந்துக் கல்லூரியும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் சாதனை
ஆய்வு விபரங்களும் ஆய்வுக் குழுக்களும்
1. வாகனப் புகைக்கு எதிரான உயிரியல் கண்காணிப்பு கருவியாக "மாவிலைகளை" பயன்படுத்துதல். இவ்வாய்வானது பங்குபற்றிய 144 ஆய்வுகளுக்குள் 1வது இடத்தினைப் பெற்றுள்ளது.
ரி.அபிட்ஷன், ஜி.போவிலாஷினி, எஸ்.ஷப்தாஞ்சனா ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
2. இயற்கைக் காளான்களைப் பயன்படுத்தி கழிவு நீரிலிருந்து நீரின் கடினத் தன்மையை நீக்குதல். வி.நரேந்திரப்பிரஷாத், எஸ்.டிலக்ஷி, ஆர்.அக்ஷிதா ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
3. மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர்முனைப் பகுதியைச் சுற்றி உள்ள திறந்தவெளி கிணற்று நீரின் தரத்தை மதிப்பீடு செய்தல். பி. பிரணவன், யூ.பிறீத்திகா, வி.நதுஷா ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
4. இலங்கையின் நான்கு வகையான வாழை இனங்களில் உள்ள எதிர் ஒட்சியேற்றல் (Antioxidant) காரணிகளின் செயற்பாட்டினை மதிப்பீடு செய்தல். எஸ்.மேருகாசன், கே.ரேவந்தியா, பி.ஷப்தவி ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
5. க.பொ.த. உயர்தரத்தில் இரசாயனவியல் பாடத்தில் சித்தி பெறுவதற்கு இரசாயனக் கணிப்பின் முக்கியத்துவம். எம்.தருணியன், எஸ்.ஜெயசாதனா, ஜி.நிகாஷினி ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
இம்மாணவர்கள் அதிபர் திரு. எம்.சபேஸ்குமார் அவர்களின் ஆலோசனைக்கமைவாக ஆசிரியர்களான திரு.செ.தேவகுமார், திரு.ரி.யுதர்சன் ஆகியோரினால் வழிப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
