கொழும்பின் சில பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள்.. மீட்பு பணியில் படையினர் தீவிரம்
புதிய இணைப்பு
தற்போது களனி கங்கை பெருக்கெடுப்பதன் காரணமாக கொழும்பு - கொலன்னாவை பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
வெல்லம்பிட்டியவில் பொலிஸார் உடனடியாக வெளியேறுமாறு மக்களுக்கு விடுத்த அறிவிப்பின் படி தற்போது வெளியேறுகின்றனர்.
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக களனி கங்கை பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்குப் பிறகு களனி கங்கையில் பதிவான மிக மோசமான வெள்ளப்பெருக்கு இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமையினால் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட கொழும்பு மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு
அவிசாவெல்லவில் உள்ள நீர் மானி படி, நாளை (29) இரவு அல்லது அதற்குப் பிறகு கொழும்பில் 2016 வெள்ளத்தை விட மோசமான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (28) பிற்பகல் 1.00 மணிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தது.

களனிகங்கைபகுதிக்கு அருகே உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையிலிருந்து உயிர்களைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான இடங்களை விரைவில் அடையவும் பொதுமக்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan