கொழும்பில் மாணவர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்: பொலிஸார் குவிப்பு (Video)
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி மீது கொழும்பு - கோட்டை, இலங்கை வங்கி வீதியில் வைத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு செத்தாம் வீதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி மாவத்தை, முதலிகே மாவத்தை ஆகிய பகுதிகளில் பிரவேசிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
எனினும், நீதிமன்ற உத்தரவை மீறி அங்கு மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
| கொழும்பில் நடத்தப்படவுள்ள இன்றைய பேரணிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ள பொலிஸார் |
முதலாம் இணைப்பு
கொழும்பு - விகாரமகாதேவி பூங்கா பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மாணவர் பேரணியானது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம பகுதிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
கோட்டாகோகமவில் உள்ள நூலகத்திற்கு சில புத்தகங்களை குறித்த மாணவர்கள் கையளிக்கவுள்ளதாகவும் தெரியவந்திருந்தது.
இந்த நிலையிலேயே பெருந்திரளான மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.




அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 5 மணி நேரம் முன்
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam