கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம்! - வரலாற்றில் மிகப் பெரிய உயர்வு பதிவானது
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (10) வரலாற்றில் மிகப்பெரிய ஒரு நாள் உயர்வைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீடு 692.35 புள்ளிகள் அதிகரித்து 10,856.07 புள்ளிகளாக இருந்தது. இது 6.81 சதவீதம் அதிக உயர்வாகும். அதேபோன்று, S&P SL20 இன்டெக்ஸ் இன்று 29.5.89 புள்ளிகள் அதிகரித்து 8.52 சதவீதமாக இருந்தது.
இது வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வாகும். எவ்வாறாயினும், 2022ம் ஆண்டு இன்று வரையிலான காலப்பகுதியில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 11.21 சதவீதம் மற்றும் S&P SL20 சுட்டெண் 11.86 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 வர்த்தக நாட்களில், அனைத்து பங்கு விலை குறியீடு 5 நாட்களுக்கு மட்டுமே உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.