சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுகத்திட்டத்தின் பின்னால் செயற்படும் சக்தியை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் - அக்மீமன தயாரதன தேரர்
சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுகத் திட்டத்தின் பின்னால் செயற்படும் சக்தியை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என சிங்கள ராவய தலைவர் வணக்கத்துக்குரிய அக்மீமன தயாரதன தேரர் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு மத்தியில் இன்று உரையாற்றிய அவர்,
ஜனாதிபதி, பொதுஜன பெரமுனுவின்; கட்சிகள், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மக்கள் துறைமுக நகரத்தின் உண்மையான விவரங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை.
இந்தநிலையில் நாட்டை விற்கவோ அழிக்கவோ அல்லது அதன் மக்களைக் கொல்லவோ திட்டங்கள் இருந்தா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
எனவே, இந்தத் திட்டம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், அத்துடன் அரசாங்கம் இந்த விடயத்தில் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.
இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதியை கேள்வி கேட்க கூட நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை. இது மாற்றப்பட்டு துறைமுக நகரத்தின் நிர்வாகம் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று சிங்கள ராவய அமைப்பின் தலைவர் வணக்கத்துக்குரிய அக்மீமன தயாரதன தேரர் கூறியுள்ளார்.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam