புலனாய்வு பிரிவின் தகவல்! கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு - செய்திகளின் தொகுப்பு (Video)
போராட்டகாரர்கள் மற்றும் ஆர்ப்பாட்டகார்களின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக கூடிய ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, கொழும்பு 7 பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட கொழும்பு நகரின் முக்கியமான மற்றும் பிரதான இடங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவின் முன்னறிவிப்பு புலனாய்வுப் பிரிவுகள் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசபந்து தென்னகோன் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், கொழும்பு 7 பௌத்தாலோக்க மாவத்தையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தியோபூர்வ இல்லத்திற்கு செல்லும் வீதி உள்ளடங்கும் வகையில் வீதி தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,