கொழும்பில் ஆசிரியரின் அழுத்தம் - பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாக பிரதேசத்தில் பிரபலமான பாடசாலையை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவணை பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதால் தனது வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து அளித்த அழுத்தத்தை தாங்க முடியாமல் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக நுகேகொட பிரிவின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
4 பேர் கொண்ட குடும்பத்தில் அவர் இளையவர் எனவும் மாணவியின் தந்தை அதே பகுதியில் உள்ள மற்றொரு பாடசாலையின் அதிபர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தவணை பரீட்சை
உயிரிழந்த மாணவி ஹோமாகம பகுதியை சேர்ந்த 15 வயதான மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி பாடசாலையில் நடைபெறும் தவணை பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.
குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து மாணவிக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளார். மற்ற மாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து திட்டியதால் மன அழுத்தத்தில் இருந்த மாணவிக்கு சமீபத்தில் தலைவலி ஏற்பட்டுள்ளது.
பின்னர், மருத்துவ சிகிச்சை காரணமாக பாடசாலை செல்ல முடியாததால், மருத்துவ பரிந்துரையை கொண்டு வருமாறு பாடசாலை அறிவுறுத்தியது.
ஒழுக்காற்று அதிகாரி
எனினும் பரிந்துரையுடன் கூடிய மருத்துவ அறிக்கையை அவரால் கொண்டு வர முடியாததால், அன்றைய தினம் வகுப்பு ஆசிரியர் மாணவியை பாடசாலையின் ஒழுக்காற்று அதிகாரியிடம் ஒப்படைத்து, மாணவிக்கு சில தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வருத்தமடைந்த மாணவி வீட்டிற்குச் சென்று உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
