கொழும்பு போராட்டத்தில் ஆடைகள் களையப்பட்ட அவலம்
கொழும்பில் சற்றுமுன் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக இன்று (20) இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது போராட்டத்தைக் களைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பத்துக்கும் மேற்பட்ட நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வரி அதிகரிப்பு
இது மட்டுமன்றி போராட்டக்காரர்களை தாக்கி அவர்களின் ஆடைகள் களையப்பட்ட காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும் இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களை பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் பொருட்களின் விலைகள் தொடர்பில் மக்கள் போராட்ட இயக்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
முழுமையான காணொளியை காண இங்கே அழுத்தவும்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 6 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
