போராட்ட இடத்தில் பதற்ற நிலை! 20 பேர் மருத்துவமனையில் அனுமதி
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் காரணமாக, அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையின் போது காயமடைந்த 20 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு விகாரமஹா தேவி பூங்கா அருகே ஆரம்பமான தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி யூனியன் பிளேஸ் பிரதேசத்தில் நுழைந்த போது பொலிசார் அதனைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்பிரதேசத்தில் பிரவேசிப்பதைத் தடை செய்யும் வகையில் கோட்டை மற்றும் மருதானைப் பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவுகள் இரண்டைப்பெற்றிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாது வீதிகளை மறித்து நின்றனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு பிரயோகத்தில் பலர் காயமடைந்திருந்தனர்.
தற்போது காயமடைந்தவர்கள் அனைவரும் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
