உத்தேச கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு முன்மொழிவு தொடர்பான மனு விசாரணை ஒத்திவைப்பு
உத்தேச கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு முன்மொழிவு, இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமநீதியரசர் ஜயந்த ஜெயசூரிய தலைமையிலான ஐந்து நீதியரசர் அமர்வில் இன்று இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்;டன. இந்த யோசனையை எதிர்த்து 18 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்பனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் பொதுச்சமூக உறுப்பினர்கள் உட்பட்டவர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த யோசனை தொடர்பி;ல் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பல்வேறு உட்பிரிவுகளை மனுதாரர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
மேலும் இந்த யோசனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதிகள் நாடாளுமன்றத்தில்
சிறப்பு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும் மற்றும் வாக்கெடுப்பால்
அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
