கொழும்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்ற நிலை (Video)
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் எரிபொருள் நிரப்பு நிலையம் முற்கையிடப்பட்டு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
காலையில் இருந்து குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுப்பட்டிருந்த போதிலும், தற்போது பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸாரினால் அச்சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இன்று காலையிலும் குறித்த எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்தவர்கள் மத்தியிலும் பலமுறை குழப்பம் ஏற்பட்டிருந்தது.
காலை 8.00 மணியில் இருந்து குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மண்ணெண்ணெய் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலையில் இருந்து வரிசையில் காத்திருந்த மக்களால் எரிபொருள் நிலையம் முற்கையிடப்பட்டு்ள்ளது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்து வரும் நிலையில் அதற்கு பயனின்றி போகும் சந்தர்ப்பத்தில் ஆவேசத்துடன் நடந்துவருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு