கொழும்பின் முக்கிய பகுதியை இலவசமாக அழகுபடுத்தும் ஜப்பான்
கொழும்பில் உள்ள பேர ஏரியை இலவசமாக சுத்தம் செய்து அழகுபடுத்த ஜப்பானிய நிறுவனமொன்று அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த நிறுவனம் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வேலைத்திட்டம் 06 மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ளதுடன், திட்டத்திற்கான மொத்த செலவு 3 மில்லியன் டொலர்களாகும்.

இந்த தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து மானியமாக பெறப்படஉள்ளது.
கங்காராம விகாரையின் தலைவர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜியின் வேண்டுகோளுக்கு இணங்க, பேர குளம் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதால் அதனை சுத்தப்படுத்தும் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் பெப்ரவரி முதல் வாரத்தில் கையெழுத்தாகி, அதன் பிறகு திட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri