உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற மறுக்கும் ரோசி சேனாநாயக்க! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, மாநகரசபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், மேயர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த ஒரு மாத கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்குமாறு மேல் மாகாண ஆளுநரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகர ஆணையாளர் கடிதம்
இந்நிலையில், ரோசி சேனாநாயக்கவின் கோரிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதுடன்,கடும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாநகர ஆணையாளர் விடுத்துள்ள கடிதத்தில்,
மார்ச் 20ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் நாள் வரையான காலப்பகுதிக்கான நீர், மின்சாரம், தொலைபேசி மற்றும் ஏனைய வசதிகளுக்கான கட்டணங்களை முன்னாள் மேயர் தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
