கொழும்பு மாநகர சபை வரவு செலவு திட்டம்: மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளது
கொழும்பு மாநகரசபையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட தயாரிப்பு செயல்முறை குறித்து மாநகர மேயர் வரை காலி பால்தசார் விளக்கமளித்துள்ளார்.
டிசம்பர் 22 அன்று சபை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இந்த வரவு செலவு திட்டம், டிசம்பர் 31 அன்று இரண்டாவது வாசிப்பிற்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டம்
இந்த திட்டம் வெறும் எண்களின் தொகுப்பு அல்ல; மாநகரசபையின் செயல்திறனையும் எதிர்வரும் ஆண்டிற்கான அபிவிருத்தித் திட்டங்களையும் பிரதிபலிப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.

2023/24 காலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை இல்லாமல் ஆணையாளர் முறையில் நிர்வாகம் நடந்ததால், வரவு செலவுத் திட்ட தயாரிப்பு சிக்கலானதாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, புதிய சபை நியமிக்கப்பட்ட சில வாரங்களுக்குள் திட்ட தயாரிப்பு தொடங்கப்பட்டு, ஜூலை மாதத்தில் 16 மாநகர நிறுவனங்களிடமும், ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமும் முன்மொழிவுகள் கோரப்பட்டன.
எழுத்து மூல முன்மொழிவுகள்
அவை, அரசியல் பேதமின்றி அவை பொதுநலன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டன. முதல் முறையாக மாநகர ஊழியர்களிடமிருந்தும் எழுத்து மூல முன்மொழிவுகள் பெறப்பட்டன. நிதி சாத்தியக்கூறுகள் மற்றும் செலவுத் தேவைகள் குறித்து நவம்பர் வரை கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

பின்னர் 23 நிலைக் குழுக்கள், நிதிக் குழுக்கள் ஆகியவற்றின் பரிசீலனையுடன், சட்டப்படி பொதுமக்கள் பார்வைக்காகவும் வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டது.
எனினும், 2025, டிசம்பர் 22 அன்று ஒப்புதல் பெறத் தவறிய குறித்த வரவு செலவு திட்டம், டிசம்பர் 31 அன்று மீண்டும் பரிசீலிக்கப்பட உள்ளது. ஆரம்ப தோல்வியினையும் மீறி, கொழும்பு மக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கைத் தரமும் வளமான நகரமும் உருவாக்குவது தமது இலக்காகத் தொடரும் என மேயர் உறுதியளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |