தாமரை கோபுரத்தில் உருவாகும் புதிய திட்டங்கள்! மூன்று பில்லியன் முதலீடு
கொழும்பு தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் கியேட் டிசயின்ஸ் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் இன்று (18) முதலீட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட முழுமையான வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு வலயம் ஒன்று தாமரை கோபுர வளாகத்தில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பில்லியன் முதலீடு
எதிர்வரும் மூன்று வருட காலப் பகுதியில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் கொழும்பின் தாமரை கோபுர பிரதேசமானது முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான மையமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இன்னும் பல பில்லியன் டொலர்களை கொண்டு வர முடியும்” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam