கொழும்பு - கண்டி வீதி பகுதி மூடப்படும் - நெடுஞ்சாலை அமைச்சு
கொழும்பு - கண்டி வீதியின் 98வது கிலோ மீற்றர் மைல்கட்டை பகுதியில் கீழ் கடுகன்னாவ பகுதி நாளை காலை 9.00 மணி வரை மூடப்படும் என நெடுஞ்சாலை அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் களப்பரிசோதனை செய்து வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி வீதியின் 98வது கிலோமீற்றர் மைல்கட்டை பகுதியில் கீழ் கடுகன்னாவ பகுதி நாளை காலை 9.00 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, போக்குரவரத்து தடையை தடுப்பதற்கு பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும்.
அதற்குத் தேவையான வழிகாட்டல்களை இலங்கை பொலிஸாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் வழங்கி வருகிறது.
கொழும்பில் இருந்து கண்டிக்கு வரும் வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள்,
1. அம்பேபுஸ்ஸ ஊடாக குருநாகல் வந்து, கடுகஸ்தோட்டை ஊடாக கலகெதர - கண்டி.
2. கேகாலையில் இருந்து பொல்கஹவெல - குருநாகல், கலகெதர கடுகஸ்தொட்டை வழியாக கண்டி.
3. மாவனல்லையில் இருந்து ரம்புக்கனை - ஹதரலியத்த - கலகெதர, கடுகஸ்தோட்டை ஊடாக கண்டி.
4. மாவனல்லையில் இருந்து ஹெம்மாதகம கம்பளை வரை - பேராதனை கண்டி
ஆகிய வீதிகளை பயன்படுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள்,
1. கட்டுகஸ்தொட்டை கலகெதர - குருநாகல் வரை கொழும்பு வரை
2. கட்டுகஸ்தோட்டை - கலகெதர - ரம்புக்கன வந்து கொழும்பு கண்டி பிரதான வீதி வழியாக கொழும்புக்கு
ஆகிய வீதிகளை பயன்படுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் (Sarda Weerakoon) மேலும் தெரிவித்துள்ளார்.
நிலவும் காலநிலையை கருத்திற்கொண்டு வீதியின் பாதுகாப்பை மேலும்
உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தர தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் ஆலோசனையின் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri