கொழும்பு – கண்டி வீதியில் பயணம் செய்யும் சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவா மற்றும் மாவனெல்லை இடையிலான பகுதியில் வாகனங்களை செலுத்தும் போது அதிக கவனத்துடன் செயல்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால், குறிப்பாக சரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகள் வழியாகச் செல்லும் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்தி, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது.
அறிவுறுத்தல்
அதன்படி, கண்டி மாவட்டத்தின் யட்டினுவாரா பிரதேச செயலாளர் பிரிவுக்கு மூன்றாம் நிலை (Red Notice) மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அபாயப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என அனர்த்த மேலாண்மை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை மண்சரிவு எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் சாரதிகள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam