குடும்பத்துடன் ஹெலிகொப்டர் மூலம் சென்ற அரசியல்வாதி...!
கேகாலை நிதஹாஸ் மாவத்தையில் இன்று காலை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேகாலை சுதந்திர மாவத்தையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடிக்கொண்டிருந்த போது தனியார் விமான சேவைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று கேகாலை மாநகர சபை மைதானத்தில் தரையிறங்கியுள்ளது.
கேகாலையைச் சேர்ந்த பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரும் அவரது குடும்பத்தினரும் ஹெலிகொப்டரில் அப்பகுதியை விட்டு வெளியேறியதாக கேகாலை பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த உலங்குவானூர்தி புறப்பட்டு கண்டி நோக்கி பயணித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்தின் வீடும் கேகாலை நகரசபை விளையாட்டு மைதானத்தை அண்மித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri