கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ரயிலில் இயந்திர கோளாறு! பயணிகள் அசௌகரியம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற யாழ் தேவி புகையிரதம் இயந்திரக் கோளாறு காரணமாக ஓமந்தை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து இன்று காலை 6.25 மணியளவில் புறப்பட்ட யாழ் தேவி புகையிரதம் வவுனியா, ஓமந்தையை கடந்து புளியங்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து குறித்த புகையிரம் இழுத்து வரப்பட்டு ஓமந்தை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் குறித்த புகையிரதத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொடிகாமம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற பயணிகள் பலரும் ஓமந்தையில் தங்கியுள்ளனர்.
அவர்களை கொழும்பில் இருந்து யாழ் நோக்கி செல்லும் அதிவேக சொகுசு புகையிரதத்தில் மாற்றி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை புகையிரத திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
