கொழும்பில் விருந்தகமொன்றில் வெடிப்பு (VIDEO)
கொழும்பிலுள்ள விருந்தகமொன்றில் இன்று காலை வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
கொழும்பு 7, பழைய குதிரைப் பந்தய மைதானத்தில் அமைந்துள்ள விருந்தகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து விருந்தகத்தில் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு கசிவினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
என்ற போதும் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச் சேதங்களோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
கொழும்பு ரேஸ்கோஸில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில் இன்று காலை வெடிவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துக்கு எாிவாயுக் கசிவு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தநிலையில் சம்பவம் தொடா்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.


