அக்கினி களம் காணும் இந்துக்களின் மாபெரும் விவாத சமர் " சொல்லாடல் 2026" - யார் வெல்லப் போகிறார்கள்..!
முத்தமிழை ஒன்றாய் இணைத்து எத்தடையையும் நன்றாய் உடைத்து கற்ற தமிழதை கலைகளாய் மாற்றி ஒற்றைநாளில் கலைமகள் ஆசிபெற்று அறத்தினை அதரத்தில் கொண்டு செந்தமிழினை அகத்தினில் கொண்டு எட்டுத்திக்கும் எட்டா செவிக்கும் சொற் பேச்சில் வீறு கொண்டு எழுந்து இந்துவின் களத்தில் முத்தமிழின் நிழலில் விதியோடு மதி சேர்த்து இந்துவின் மைந்தர்கள் கரம் கோர்த்து நடாத்தும் “சொல்லாடல் 2026” நடைபெற்று வருகின்றது.
யாழ் இந்து கல்லூரி மற்றும் கொழும்பு இந்து கல்லூரி இணைந்து இந்த விவாதச்சமரை கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டுள்ளார்.
மேலும் சிறப்பு அதிதிகள், இந்துவின் மைந்தர்கள், முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தர்க்கம் மட்டும் அல்லாமல், மொழி நயம், கருத்து துல்லியம், ஒழுங்கு மற்றும் நடைமுறைகள் என பல்வேறு கோணங்களில் மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதனை பார்வையிட கீழுள்ள காணொளியை காண்க..
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam