கொழும்பு மற்றும் அண்மித்த நகரங்களிலுள்ள பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் போதைக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மைய தகவல்களின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான இளம் பெண்களும் யுவதிகளும் பல்வேறு போதைப்பொருட்களுக்கு பயங்கரமான விகிதத்தில் அடிமையாவதைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸார், போதைப்பொருள் தடுப்பு பிரிவுகள் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் தரவுகளின்படி, பெண்களிடையே 'ஐஸ்' (மெத்தம்பேட்டமைன்), மாத்திரைகள், மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் போதைக்கு அடிமையாதல், அவர்களின் குழந்தைகளின் அறிவுசார் மற்றும் உடல் வளர்ச்சிக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளார்.
இந்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கும், தேவையான ஆதரவு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை வழங்குவதற்கும் அமைச்சு ஏற்கனவே ஒரு விசேட வேலைத்திட்டத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விபத்து
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan