இலங்கையில் இருந்து 200இற்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற விமானத்தில் ஏற்பட்ட விபத்து
இலங்கையில் இருந்து சென்ற பங்களாதேஷ் சென்ற விமானத்தின் சக்கரத்தில் நரி சிக்கியதால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையிலிருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பிட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் அதிகாலை 2 மணிக்குப் பிறகு தரையிறங்கிய போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட விபத்து
விமானம் தரையிறக்கும் போது அதன் சக்கரத்தில் நரி ஒன்று சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் லேண்டிங் கியரில் நரி சிக்கிக் கொண்டது. விமானியின் தெளிவான மற்றும் தொழில்நுட்பக் குழுவின் செயற்பாட்டின் மூலம் விமானம் பாதுகாப்பாக ஓடுபாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
விமான நிலைய அதிகாரிகள்
விமான தரையிறங்கியதும், தரை ஊழியர்கள் உடனடியாக சிக்கிய நரியை அகற்றி, விமானத்தை சிக்கலின்றி ஓடுபாதையில் இருந்து நகர்த்தியுள்ளனர்.
விமான நிலைய அதிகாரிகள் சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயல்பட்ட ஊழியர்களின் ஒருங்கிணைந்த முயற்சியை பாராட்டியுள்ளனர்.





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
