பாலியலுடன் தொடர்புடைய மருந்துகளால் பறிபோகும் உயிர்கள்! கொழும்பில் தீவிர நிலை
பாலியல் தூண்டல் மாத்திரைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் மரணங்களின் ்எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் இவ்வாறு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநகர உதவி மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.
மிகவும் ஆபத்தான நிலை

மருத்துவ ஆலோசனையின்றி பாலியல் தூண்டல் மாத்திரைகளை பயன்படுத்துவதால் இவ்வாறு மரணங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 20-25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பாலுறவு பரிசோதனைக்காகவும், 40-45 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் பாலின உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்த மாத்திரைகளை உட்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலை மிகவும் ஆபத்தான நிலை எனவும், யாரும் மருந்துச் சீட்டு இல்லாமல், உரிய அளவைத் தாண்டி பாலுறவைத் தூண்டும் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.