கொழும்பு நீதிமன்றத்தினால் குடும்பஸ்தரொருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (31) தீர்ப்பளித்துள்ளது.
2.53 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
2014 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி கொழும்பு தோத்தலக பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2.53 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பை அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதிவாதிக்கு முன்னைய குற்றச்சாட்டுகள் இருப்பதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை கருத்திற்கொண்ட நீதிமன்றம், 43 வயதான பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
