கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்!
கொழும்பு - காலி வீதியில் கல்கிஸ்ஸ பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த விபத்து இன்று (03) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரில் ஒரே குடும்ப உறுப்பினர்கள் பயணித்துள்ளதாகவும், அவர்கள் காரில் இருந்து குதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் கார் முற்றாக எரிந்துள்ளதுடன், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் தீயிணை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மவுண்ட் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.