பெரும் அச்சுறுத்தாலான பகுதியாக மாறிவரும் கொழும்பு! மாவட்ட ரீதியில் கொரோனா நிலவரம்
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000ஐ அண்மித்துள்ளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் (NOCPCO) அறிவித்துள்ளது.
இதன்படி,நேற்று காலை வரையில் கொழும்பில் இருந்து மொத்தம் 19,950 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், மேற்கு மாகாணத்தில் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 11,118 மற்றும் 3,842 பேர் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் 2,403 பேரும், இரத்தினபுரியில் 1,138 பேரும், காலி மாவட்டத்தில் 1,057 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 996 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 848 பேரும், கேகாலை மாவட்டத்தில் 732 பேரும் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2021ம் ஆண்டின் முதல் 19 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் 2,806 பேரும், கம்பஹா, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 2,120, 809 மற்றும் 755 பேரும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே காலகட்டத்தில் காலி, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் முறையே 399, 328, 320 மற்றும் 312 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 100 வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதே நேரத்தில் வவுனியாவில் மொத்தம் 181 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாணத்தில் நேற்று வரை 625 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாவட்டத்தில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு காணப்படுவதாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.