கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடருந்து விபத்தில் சிக்கிய சிறுமி
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடருந்தில் பயணித்த பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
கட்டுபாத்த கெகுனுகொல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து மட்டக்களப்புக்கு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் வெலிகந்த பொலிஸ் நிலையப் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan