கொழும்பை உலுக்கிய படுகொலைகள் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Vethu Jul 09, 2024 09:44 AM GMT
Report

கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரியில் நேற்றையதினம் படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான வசந்த பெரேரா தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2019ஆம் ஆண்டு டுபாயில் பாதாள உலகக் கும்பல் தலைவர்களாக இருந்த மாகதுரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டோரை பொலிஸார் கைது செய்ததில் கிளப் வசந்த எனப்படும் வசந்த பெரேராவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாகதுரே மதுஷிற்கு சொந்தமான 100 கோடி ரூபா பணமும் கிளப் வசந்தவிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

யாழில் அரச வளங்களை முடக்கும் வைத்திய அதிகாரிகள் : பகிரங்கமாக கேள்வி கேட்கும் பொதுமகன்

யாழில் அரச வளங்களை முடக்கும் வைத்திய அதிகாரிகள் : பகிரங்கமாக கேள்வி கேட்கும் பொதுமகன்

கொலை முயற்சி

கஞ்சிபானி இம்ரான் பல தடவைகள் கிளப் வசந்தவிடம் பணத்தை தருமாறு கோரியுள்ளார். ஆனால், அந்த பணத்தை கிளப் வசந்த கொடுக்க மறுத்துள்ளார்.

கொழும்பை உலுக்கிய படுகொலைகள் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் | Colombo Athurugiriya Gunshot Incident New Update

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் கிளப் வசந்தவை கொலை செய்ய திட்டமிடப்பட்டு அது தோல்வியடைந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், கிளப் வசந்த அதுருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் 03 மாதங்களுக்கு திட்டமிடப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையில் Tattoo நிலைய உரிமையாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கமைய, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tattoo நிலையம் 

பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் அவர், பச்சை குத்திக்கொள்ளும் திறன் கொண்டவர் எனவும், ஆனால் அதற்கான ஸ்தாபனமொன்றை நடத்துவதற்கு பணம் அவரிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பை உலுக்கிய படுகொலைகள் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் | Colombo Athurugiriya Gunshot Incident New Update

அதன்படி பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தனது நண்பர் ஊடாக வெளிநாட்டவர் ஒருவருடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.

வெளிநாட்டவரும் பச்சை குத்தும் நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கு பணம் வழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

Tattoo நிலையத்தின் திறப்பு விழாவொன்றை ஏற்பாடு செய்து, கிளப் வசந்த உட்பட பிரபலங்கள் சிலரை அழைக்குமாறு, வெளிநாட்டில் உள்ள நபர் Tattoo நிலைய உரிமையாளருக்கு அறிவித்துள்ளார்.

தண்ணீரூற்றில் நடைபெற்ற சிறுவர் சந்தை : வியப்பில் ஆழ்த்திய சிறுவர்கள்

தண்ணீரூற்றில் நடைபெற்ற சிறுவர் சந்தை : வியப்பில் ஆழ்த்திய சிறுவர்கள்

சமூக வலைதள அழைப்பு

அதற்கமைய, கிளப் வசந்தவை திறப்பு விழாவிற்கு வருமாறு சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்று கிளப் வசந்த, அவரது மனைவியும் பாடகியுமான கே.சுஜீவா உள்ளிட்டோர் நேற்று வந்துள்ளனர்.

கொழும்பை உலுக்கிய படுகொலைகள் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் | Colombo Athurugiriya Gunshot Incident New Update

இந்நிலையில் குறித்த நிலையத்திற்கு காரில் வந்த இருவர், 17 வினாடிகளில், சம்பந்தப்பட்ட குழுவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

அந்த துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் மற்றொரு நபர் ஒருவர் உயிரிழந்தனர். கிளப் வசந்தவின் மனைவி, பாடகி கே. சுஜீவா மற்றும் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கே சுஜீவா மற்றும் மற்றுமொருவர் அத்துருகிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுடப்பட்ட கே.சுஜீவாவின் ஒரு கால் பலத்த சேதமடைந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு

மேலும் அவர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கிளப் வசந்தாவின் மனைவியும் மற்றுமொரு பெண்ணும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பை உலுக்கிய படுகொலைகள் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் | Colombo Athurugiriya Gunshot Incident New Update

கிளப் வசந்தவின் மனைவி நேற்று இரவு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, புலத்சிங்கள, அயகம, தெல்மெல்ல பிரதேசத்தில் பாழடைந்த நிலமொன்றில் இருந்து கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின்படி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரியில் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், புலத்சிங்கள பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வேன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற கார் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அதுருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதியை விரைவில் அறிவிக்க நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதியை விரைவில் அறிவிக்க நடவடிக்கை

ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரித்தாள அரசாங்கம் சதி

ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரித்தாள அரசாங்கம் சதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US