குறைந்த வருமானம் பெறுவோருக்கான புதிய வீடமைப்பு திட்டம்: நகர அபிவிருத்தி அமைச்சின் விசேட அறிவிப்பு
கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத் தொகுதிகள் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதற்கமைய, நிர்மாணிக்கப்பட்டுள்ள 6 வீட்டு தொகுதிகளளில் உள்ள 4074 வீடுகளுக்கு உடனடியாக மக்களை மீள்குடியேற்றுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கே மாவத்தை, ஸ்டேடியம் வீதி, அப்பல்வத்தை, பெர்குசன் வீதி, ஒபேசேகரபுர, மாதம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளது.
சட்டப் பத்திரம்
இவ்வாறு கட்டப்படும் வீடு 550 சதுர அடியாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான சட்டப் பத்திரம், இலவச தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள், நிதி மற்றும் இதர உதவிகள் பலன்களாகப் பெறப்படும் என்றும் நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |