முச்சக்கரவண்டிகளிடம் அறவிடப்படும் புதிய கட்டணம்! எழுந்துள்ள எதிர்ப்பு
பல்வேறு பாகங்கள் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு முச்சக்கரவண்டி அலங்கரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உதிரிபாகங்களுக்கான விலைகளை அறிவிக்கும் வர்த்தமானியை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அண்மையில் வெளியிட்டது.
நியாயமற்ற செயல்
அதன்படி முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு பல்வேறு உதிரிபாகங்களை நிறுவுவதற்கு அனுமதியளிக்கப்பட்டாலும் அதற்கு வெவ்வேறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றமை நியாயமற்ற செயல் என தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தொழில்சார்ந்த முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக முச்சக்கரவண்டி அலங்கரிப்பாளர்கள் சங்கம் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் என்பன தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri
