உணவுக்காக தேங்காய் பறிக்க சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு
வீட்டில் உணவை சமைப்பதற்காக தேங்காய் ஒன்றை பறிக்க சென்ற ஒருவரை, தோட்டத்தின் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தேங்காய் பறிக்க சென்ற நபர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொச்சிக்கடை தளுபத என்ற பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளம் நபரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
இந்த இளைஞன் நேற்று பிற்பகல் 2.15 அளவில் அனுமதியின்றி தென்னந்தோட்டத்திற்குள் சென்று தேங்காய் பறித்துள்ளார். அப்போதே உரிமையாளரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அனுமதிப்பத்திரம் பெற்ற குழல் துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தென்னந்தோட்டத்தின் உரிமையாளரை கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.