எரிவாயு நெருக்கடிக்குத் தீர்வாக அரச மரக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து கரி உற்பத்தி
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு நடைமுறை தீர்வாக, அரச மரக் கூட்டுத்தாபனத்தினால் கரி உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மரக் கூட்டுத்தாபனத்தினால் அப்புறப்படுத்தப்படும் மரக் கழிவுகளைப் பயன்படுத்தி கரியை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் மகிந்த அமரவீர இதற்கு முன்னர் ஆலோசனை வழங்கினார்.
அதன்படி, அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம். எஸ். கருணாரத்ன இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மர கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை வழங்கினார்.
அரச மரக் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கரியின் அறிமுகம் வனவிலங்கு மற்றும் வனவள அமைச்சில் இடம்பெற்றது. இந்த மரக் கரியின் வெப்பத் திறன் மிகவும் உகந்த அளவில் இருப்பதை தொழில் நுட்பக் கழகம் உறுதி செய்துள்ளதாக கலாநிதி முத்துமாலை தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் விநியோகிக்க முயற்சி
அரச மரக் கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மரக்கரியை 130 ரூபா விலையில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு பாரிய கிராக்கி நிலவுவதால் எதிர்காலத்தில் இதனை விரிவுபடுத்தி நாடளாவிய ரீதியில் விநியோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மர கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
அரச மரக் கூட்டுத்தாபனத்தினால் வெட்டப்பட்ட மரப் பாகங்கள் இதுவரை எவ்வித உபயோகமும் இன்றி அழுகிய நிலையில் தற்போது எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு மாற்று எரிசக்தியாக கரியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்தமைக்காக அரச மரக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர நன்றி தெரிவித்துள்ளார்.

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
