எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி ஏற்படலாம்:பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு
இலங்கையில் மின்சாரத்தை உற்பத்தி தேவையான நிலக்கரி கையிருப்பானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் மாத்திரமே போதுமானது என பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாது போனால், கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு சுமார் 600 மில்லியன் டொலர்களை செலவிட நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் இலங்கையிடம் டொலர்கள் கையிருப்பில் இல்லாமை பெரும் நெருக்கடிக்களை உருவாக்கியுள்ளது.
இலங்கையில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரிகளை பயன்படுத்தியே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri