அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் நிலக்கரி பரிசோதனை செய்யப்படவில்லை: கோப் குழுவில் அம்பலம்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி ஆரம்பம் தொடக்கம் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனை செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய ஆரம்பித்த காலம் தொடக்கம் டிரைடென்ட் நிறுவனம் உத்தியோகபூர்வ அங்கீகாரம் அற்ற ஏற்றுமதித் துறைமுக ஆய்வகத்தில் சம்பந்தப்பட்ட நிலக்கரி இருப்புகளைப் பரிசோதித்து வருவதாக கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப் குழு விசாரணைகள்
கோப் குழு முன் நடைபெற்ற விசாரணைகள் போது லங்கா நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் இதை ஒப்புக்கொண்டார்.
லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் கோப் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்ட போதும் அவர் கலந்து கொள்வதை வேண்டுமென்றே தவிர்த்ததாகவும் கோப் குழு குற்றம்சாட்டியது.

மேலும் கோப் குழுவின் தலைவர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்வதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது உறுப்பினர்களிடையே காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam