கிளப் வசந்த மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அடையாளம்: விசாரணையில் சிக்கிய சந்தேகநபர்கள்
கிளப் வசந்த மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இக்கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

விபத்தில் சிக்கிய யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து: 50 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
7 பேர் கைது
அதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய நிலையில், அவர்கள் ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான நீண்ட விசாரணையின் பின்னர், கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பல சந்தேகநபர்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இந்த கொலைச் சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச்செல்வதற்காக விசேட பேருந்து ஒன்று தயார் செய்யப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பான தகவல்
துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரும் முன்னாள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவர் மற்றும் குழுவினர் அத்துருகிரிய பிரதேசத்தில் 6 மாத கால அடிப்படையில் வீடொன்றினை வாடகைக்கு எடுத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
